இவள் என் காதலி

..."" இவள் என் காதலி ""...

எட்டுமீது எட்டுவைத்து பதுமையவள்
பக்கம் வர நெஞ்சுக்குள்ளே வெக்கம் வர
அச்சமது பொங்கிவிட விரல் கோலமிட
கிட்டவந்து கட்டியெனை அள்ளிக்கொள்ள
பட்டமரம் சட்டேன்றே மெல்ல துளிர்ந்தெழ
துள்ளிவந்த இன்பமதில் தன் எல்லைவிட
விட்டு விட்டே துடிக்கின்ற இதயமிங்கு
(இடை)விடா வேகமததை கூட்டிச்செல்ல
உச்சி தொட்டு என் பாதம் வரை சப்தமிட்டு
மிச்சமின்றி எச்சமிட்டு யுத்தம் செய்தவளே
காதலிரவுகளில் துயிலின்றி துயிலுரித்து
துக்கங்களை தூரவைத்து பக்கம் வந்து நீ
மஞ்சத்திலேறி தன் நெஞ்சத்திலணைத்து
வஞ்சமில்லாத எந்தன் பஞ்சணையாளே
என்னையும் விஞ்சிவிடும் அன்புடையாள்

என் காதலின் காதலன்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (8-May-14, 2:34 pm)
Tanglish : ival en kathali
பார்வை : 116

மேலே