உழவு நாடன் 6
ரெண்டடுக்கு இடைவெளில
நெடுங்கலப்பை நீ தொரத்தி
கடலவெத வெதக்கையிலே
ஒம் மெட்டிமுத்து
சத்தத்துக்கு..... ஒத்த
மணியாட்டும் காளமாடு.......!!!
******************************************************
வரப்பிறக்க சறுக்கலில
வளலப் பாம்பு
நெளிஞ்சோடக் கண்டு..
வாழக்கொலையா நீ சரிய....
எங்
ஒருகையில பூக்கூடை
இன்னொரு கை ஒங்கூட....!!!
*********************************************************
பூவரச மரம் பொளந்து
பொங்கலுக்கு நா
வெறகொடைக்க......
வேர்த்த முதுகுல பூத்தூவும்
நீ ...
வீசியடிச்ச
பானைத்தண்ணி.....!!
**********************************************************
குளுருகாலச் சாயங்காலம்
கயித்துக்கட்டில் நா
பிரிச்சி.....எளகிப்போன
முடிச்செல்லாம்
இறுக்கிவிட்டுச் சிரிக்கையில...
பக்கம்வந்து வெக்கத்தோட
வெடுக்கிப்புட்டு வேலியோரம்
முருங்கக்கீர பறிக்கப்போற....
************************************************************