மதுரை குலுங்க குலுங்க

மதுரை குலுங்க குலுங்க .......
சொந்த பந்தம் வந்ததையா
மதுரை நிரம்பி போனதையா

வைகையில குளிக்க
ஒரு கூட்டம் ஓடயில
வந்தவங்க பசியாற
ஒரு கூட்டம் ஒடுதையா
காளையர் கூட்டம்
கன்னிபுறாவ தேடயில
குறுக்க இரயிலொட்டி
சிறுசுங்க பாயுதையா
மதுரையே அதிருதையா
சந்தோசம் பெருகுதையா

இந்தியாவ பாக்கணுமா
எங்க ஊரு வாருமையா
அம்மனுக்கு கல்யாணம்
பாயம்மா தாலி விநியோகம்

ஓசி விசிறியில பாக்கலாம்
பட்டணம் பொடி முத்திரை
சீர்மிகுந்து போகுதையா
மதுரையில சித்திரை

கோவிந்தா சத்தம் தான்
திசையெங்கும் கேக்க
பவனிவர தொடங்குவாரு
அழகர் பல்லாக்கு தூக்க

காவலர் கூட்டம் தான்
கள்ளன தேடயில
கள்ளழகன் பவனியில
கள்ளனுக்கும் என்ன வேலை

தெருவெல்லாம் மைக் கட்டி
ஆடுது ஒரு கூட்டம்
சாமி வந்து ஆடுரதும்
கூட நாங்க ஆடுரதும்
மதுரை சலம்பலுக்கு
அளவே இல்லையா

தீர்த்தவாரி இறக்கயில
மதுரையும் நனையுதையா
சித்திரையும் குளிருதையா

நடந்து களைத்தோரின்
தாகம் தான் தீர்த்திடவே
அடிக்கு ஒர் அடியா
நீரும் மோரும் கிடைக்குமையா

இராட்டினம் சுத்திதான்
தலை சுத்தி போனோமே
டெல்லி அப்பளம் கடிக்கயில
கண்ணும் தான் கலங்குதையா
அன்னைக்கு உதயமாகும்
ரோட்டோரம் கடைநிறைய
அள்ளிட்டு போவாரு
பைசாவும் பை நிறைய

வேட்டி கட்டும் இளந்தாரி
தாவணியில் சிறுபொண்ணு
பாக்க கண்ணு வேணுமையா
மதுரை வந்து பாருமையா

வந்த அழகரு
சந்தோசம் தந்தாரே....
போகயில தான் சொந்தத்தையும்
கூட்டிட்டு போரரே .....
சொந்தம் பந்தமுனு
சொகுசாதான் இருந்தோமே
மனுச மக்கள பாக்கதான்
இன்னும் காக்கணும் ஒரு வருசமே !!!!!!

பாண்டிய இளவல் (மது)

நன்றி - Guna Amuthan , Prabhu Inno & Mani Kandan

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது) (9-May-14, 12:04 am)
சேர்த்தது : G. Madhu
பார்வை : 118

மேலே