காலை வணக்கம்
காலை வணக்கம்
வெயில் தெரியா
வெல்வெட்டு பூச்சிகளாய்
சிறைபட்ட சிந்தனைகளுக்கு............
எறிந்த எலும்பு துண்டங்களாய்
எழுதியே ஓய்ந்துபோன
பேனா முனைகளுக்கு ......
வறண்ட நிலத்தின் புள் நுனியாய்
வற்றிப்போன கவி வரிகளுக்கு ..........
கவி எழுதியே காலம் போன
கருவறை கைகளுக்கு .......
மண்ணில் புதைந்த மயிலிறகாய்
நெஞ்சம் மறந்த தமிழ் பண்பை
நினைவுட்டிய நெஞ்சங்களுக்கு ..........
காலை வணக்கம்