விடைப் பெற்றது உயிர் ஹைக்கூ

*
உள்ளே வந்த மூச்சு
வெளியேறி
விடை பெற்றது உயிர்.
*
காற்றுக்கு என்றுமே
உயிரிழப்பில்லை
மரங்களுக்குப் பொறாமை.
*
இருப்பது எல்லாமே
இழப்பது தான் கொடுமை
உயிரிழப்பு பேரிழப்பு.
*
சீற்றம் எதுவென்றாலும்
சிறகை இழப்பதென்னவோ?
உயிர்ப் பறவைகளே…!.
*
உயிரிழந்த மக்கள்
நினைவுகளைச் சுமந்து
அழுகிறது பேரூலகம்.

எழுதியவர் : ந.க.துறைவன் (9-May-14, 8:59 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 113

மேலே