நாம் அஞ்சுவதும் அடிபணிவதும்

நாம் அஞ்சுவதும் அடிபணிவதும்
இறைவனுக்கா ! தனி மனிதனுக்கா ?

கலிமாவை கூறிய நம் நாவும்
ஈமானை கொண்ட நம் கல்பும்

சொற்பமாய் உலக வாழ்க்கை
அற்பமாய் மனதில் எண்ணம்

பணம் கொண்ட சீமானாய் வாழ்வு
இறுமாப்புடன் இனியும் மனிதன்

சேர்ந்து துதி பாடும் ஒரு கூட்டம்
மாறும் இதில் வாழ்வு முறையும்

பலர் நன்றி கடனை தீர்க்க நினைத்து
உறவுகளோடு வந்த குரோதம்

மாற்றம் !
இறைவன் நினைக்கும் வரை மட்டும்!

ஏற்றம் !
இறைவன் நினைத்தால் மட்டுமே முடியும் !!

மனிதன் !
அற்பம் ! அழிந்து விடும் ஒரு நாள் எல்லாம் !!!

ஸ்ரீவை.காதர்.

எழுதியவர் : ஸ்ரீவை.காதர். (9-May-14, 11:35 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 113

மேலே