என் திருமணம்

என் திருமணம்

பனித்துளிகள் சிந்தும்
காலை வேளையில்...

பட்டாம்பூச்சி
சேலை கட்டி...

பூங்காவனத்தின்
நடுவினிலே...

பூங்காற்றும் தென்றலும்
இணையும் போது...

மேகக்கூட்டம்
பந்தல் போட...

மின்னல் கீற்றுகள்
வெளிச்சம் வீச...

வானவில்லின்
சாயம் பூசி...

விண்மீன்கள்
புன்னகை சிந்த...

மஞ்சள் வெயில்
எட்டிப்பார்க்க...

கடல் அலைகள்
இசை அமைக்க...

கெட்டி மேளத்துடன் நாதமும்
வாழ்த்துப்பாட...

என் காதலும் ஆசையும்
சங்கமம் ஆக...

பாசப்பிணைப்புகள்
ஆசியோடு...

இனிய காலையில்
நடக்கவிருக்கிறது
என் திருமணம்...............

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (9-May-14, 2:39 pm)
சேர்த்தது : shoba karthik
Tanglish : en thirumanam
பார்வை : 100

மேலே