+தீர்ப்பு மட்டும் வந்திடுமோ+

பறவையினம்
விரட்டிவிட்டு
மனிதயினம்
பெருக்குதிங்கே...

விலங்கின்வனம்
சுருக்கிவிட்டு
மனிதயினம்
வளருதிங்கே...

மரத்தைமொத்தம்
கருக்கிவிட்டு
பணத்தைமட்டும்
சேர்க்குதிங்கே...

வயலையெல்லாம்
அழுகவிட்டு
வானமெட்ட
துடிக்குதிங்கே...

சாதிமதம்
வளர்த்துவிட்டு
சண்டையிட்டே
அழியுதிங்கே..

சுற்றுபுறம்
கெடுத்துவிட்டு
மனநிம்மதி
தேடுதங்கே...

திருத்தமுண்டா
தெரியவில்லை
திருந்துவாரா
புரியவில்லை...

திருப்பம்வரும்
நாளுமுண்டோ
தீர்ப்புமட்டும்
வந்திடுமோ...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-May-14, 6:06 pm)
பார்வை : 130

மேலே