தாய்

என்னை சுமந்தவளே
என்னை கொண்டு வந்தவளே
உயிருக்குள் உயிரை வைத்து
கருவறைக்குள் என்னை வைத்து
பூமிக்கு என்னை அறிமுகம் செய்தவளே
அன்பாய் ஆதரவாய் அணைத்து வளர்த்தவளே
பண்பாய் பாசமாய் பார்த்து வளர்த்தவளே
ஒழுக்கம் உயிரென சொல்லி சொல்லி தந்தவளே
இன்று நானொரு தகப்பனாகியும் கூட
நீ எழுந்து நடக்கும் வலுவை இழந்த.போதிலும்
என்னை இறக்கி விட மனமின்றி உன் இதயத்தில்
நாள்தோறும் என்னையேதான் சுமக்கின்றாயே
இன்று உன் தினமாம் அன்னையர் தினமாம்
என் நெஞ்சில் நிறைந்தவளே உன்னையென்னி
கோவிலுக்குள் சென்று கற்சிலைகளுக்கு முன்னால்
மண்டியிட்டு அர்ச்சனை செய்ய கேட்கிறேன்
சாமி நீ இருப்பதை மறந்து

எழுதியவர் : (10-May-14, 12:24 pm)
Tanglish : thaay
பார்வை : 63

மேலே