என்பெறினு மாற்ற வலமிரார் - ஆசாரக் கோவை 24
முன்றுவ்வார் முன்னெழார் மிக்குறா ரூணின்கண்
என்பெறினு மாற்ற வலமிரார் தம்மிற்
பெரியார்தம் பாலிருந்தக் கால். 24 ஆசாரக்கோவை
பொருளுரை:
தன்னை விட பெரியராயுள்ளவர் தான் உணவருந்தும் பந்தியில் இருந்து உண்ணும் பொழுது அப்பெரியவர் உண்பதற்கு முன்னே தான் உண்ணார்.
அவருக்கு முந்தி எழுந்திரார். அவர்களை நெருங்கி யிரார்.
உண்ணுமிடத்தில் மிகுதியாக எல்லாச் செல்வமும் பெறுவதாய் இருந்தாலும் அவர்க்கு வலப்புறம் இருந்து உண்ணார்.