அன்பு தெய்வம் அவளே அன்னைக்கு வாழ்த்து

விதையில்லாம செடியும் இல்லை
விளைந்த நெல் மடியில் இல்லை
விதைத்தவனுக்கு சொந்தமில்லை
விற்றிடாத வித்து என் தாய் பெத்தமுத்து!!

தாலாட்டு பாடிப்பாடி
தாய்மடி உறங்க செய்தாய்
பசியென எண்ணி எண்ணி
மார்பணைத்து பால் தருவாய்...!!

கருவினிலே நீ உதிக்க
மடிப்பிச்சை எடுத்திருப்பா
மண்சோறு உண்டு உனை
மண்ணில் பிறக்கத் துணையிருப்பா
எதிர்பார்க்காமல் செய்பவள்தான் தாயம்மா
என்செய்தாய் எனக் கேட்பது தான் நியாமா?!!

பத்து மாதம் வயிர் சுமந்து
பத்தினியாய் தான் கிடந்து
பக்குவமாய் படுத்தெழுந்து
பத்திரமாய் பார்த்து பார்த்து
பத்தியமாய் பெற்றெடுப்பாள் உன்னையே
எனை ஏன்பெற்றாய்? கேட்பதுதான் நியாயமா?

கண்ணில் கண்ட கோவிலை தினம்
மனதில் உனைநினைத்து வேண்டிக்குவா
எந்த நோய்நொடியும் எனக்கு வரவேனுமுனு
உன்னை காக்க தவம் கிடப்பா தாயடா
நாதியத்து விடுவதுதான் நியதியா ?

அவளநினைச்சு கலங்கவில்லை
காமாலை கண்ணா உனக்கு
கலங்கி நீயும் நிக்கயில
காத்திடும் தாயவளும்
கல்லறையில் தூங்கிக் கிடப்பா...!

அன்னையர் வாழ வேண்டும்
அவளை நீயும் வளர்க்க வேண்டும்
அன்னையவள் வாழ்த்துதல் தான்
அன்பு கடவுள் வாழும் பாரு !!

விஞ்சி நிற்கும் உலகிலேயே
அன்பு மட்டும் ஆட்சி பாரு
அன்பு கடவுள் ஆசி பெற
அன்னையவள் வாழ்த்தை பெறு!!

என்னை நீ ஆசி தந்தாய் இயல்பாய்
உன்னை வாழ்த்திட வரியில்லை என்பால்
வணங்குகிறேன் அடிமுடி காணாமலே
அன்பால் தருவேன் முத்தம் அம்மா...!!

எழுதியவர் : கனகரத்தினம் (11-May-14, 1:02 pm)
பார்வை : 216

மேலே