இளமை இல்லம்

நீ ......
கருவானதால் கௌரவம் பெற்றவள்
உருவானதால் உயர்வு அடைந்தாள்
மாசம் பத்து செல்ல மாதவம் புரிந்தவள்
பிறந்தவுடன் பெருமை பெற்றவள்
அம்மா என்றழைக்க அள்ளிக் கொண்டவள்
மார்ப்பால் குடிக்க மகிமை பெற்றவள்
மழலை மொழி சொல்ல மகிழ்ச்சி அடைந்தவள்
தவழ்ந்து வர தாவி அணைத்தவள்
குறும்பு செய்ய கொஞ்சி குதுகளித்தவள்
நடை பயில நாட்டம் கொண்டவள்
அடிபடும்போது ஆறுதல் தந்தவள்
அழும்போது அடைக்கலம் தந்தவள்
படிப்பதைக் கண்டு பரவசப்பட்டாள்
சம்பாதிப்பதைக் கண்டு சந்தோஷப்பட்டவள்.....
உனக்காக இத்தனையும் செய்தவள்
இன்று......
உன்னால் புறக்கணிக்கப்பட்டாள்
ஒருப்பிடி சோறுக்கு உதாசீனப்படுத்தப்பட்டாள்...
இளமை இல்லத்தை
அவள் உருவாக்கியிருந்தால்
முதியோர் இல்லத்தை
நீ உருவாகியிருக்க மாட்டாய் ....
வீட்டில் இடஒதுக்கீடு
தராத நீ
பண ஒதுக்கீடு செய்வானேன்....?
தன் குருதியை
பாலாக்கி தந்த
தாய்க்கு இறுதிப்பால்
தரமுடியாது போன
பாவியாகி போனாயே...?
புதுமை பேசும் மானிடா ...!
புத்திக்கு எட்டும்படி உரைத்துச் சொல்
பசுமரத்தாணி போல் பதியச் சொல்..
இளமை ஒருநாள்
முதுமை ஆகும்
முதுமையும் ஒருநாள்
முதிர்ந்து போகும்
அப்போதும்
மூடக் கதவுகளோடு
உன் தாயுள்ளம்
திறந்திருக்கும் தித்திப்போடு .....!!!!!!!!!