நடக்கிறது குழந்தைத் திருமணம்

நடக்கிறது குழந்தை திருமணம்

அதிசயமாய் வாய்த்த
அரசு மாப்பிள்ளையை
தவற விடக்கூடாதென
அவசரமாய் நடக்கிறதோ!

போக்கிரியை திரியும்
பொறுக்கி ஒருவன்
பேசிய பொய் பேச்சை நம்பி
போலியாய் நடக்கிறதோ!

காதல் வயப்பட்டு
காணாமல் போகக்கூடாதென
கண்டவனைப் பார்த்து
கண்ணீராய் நடக்கிறதோ!

மனைவி இல்லாமல் வாழும்
அரைக் கிழவனின்
சொத்து சுகத்திற்க்காக
சொல்லாமல் நடக்கிறதோ!

மரணப் படுக்கையிலிருக்கும்
வயதான முதியோரின்
கடைசி ஆசையாய்
கண்டபடி நடக்கிறதோ!

வேலையில்லா ஜோசியக்காரன்
பணத்திற்காக பேசிய
பொய்யை மெய்ப்பிக்க
போராடி நடக்கிறதோ!

மாமன் என்று ஒரு சொந்தம்
எங்கிருந்தோ தேடிவந்து
மான் குட்டி அவளின்
மனம் கசந்து நடக்கிறதோ!

ஊர்ப் பெரியவன் ஒருவன்
உல்லாசமாய் இருப்பதற்கு
ஓடி ஆடும் மயிலொன்றின்
சிறகொடிக்க நடக்கிறதோ!

எதற்காக நடந்தாலும்
புனிதமான தாலியொன்று
ஆயுதமாய் அவள் கழுத்தை
அறுக்கத்தான் போகிறது!

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (12-May-14, 12:22 pm)
பார்வை : 71

மேலே