தமிழ்த்திருநாடு
தமிழ்த்திருநாடு !!!!
எங்கே சொல்லுது தமிழ்த்திருநாடு
எதற்கு இத்தனை தமிழர்கள் வீடு
அந்நிய மொழியில் தனி ஈடுபாடு
அதனால் விளைந்தது தமிழுக்கு கேடு
உலகெனும் மேடையில் தமிழர்கள் பீடு
உள்ளதா இல்லையா உண்மையை தேடு
உன் மொழி தமிழடா அதனையே நாடு
உள்ளதை சொன்னேன் இனி உந்தன் பாடு
-----அருள் ஸ்ரீ----