ஐயாயிரம் போச்சே
வட்டியோடு கடன் வாங்கி 5000 செலவழித்தான் மிலன் .. தனக்கு வயிற்று வலிக்கு டாக்டர் சொன்ன ஸ்கேன் எடுக்க..
ஆனால்.... ஸ்கேன் பார்த்த டாக்டர் சொல்கிறார் வயிற்றில் ஒன்றும் பிரச்சனை இல்லையே என்கிறார்.
எல்லாமே நார்மலாதானே இருக்கு என்கிறார்...
அவனுக்கு வலியோ அதிகமாயிருக்கு ஆனால் ... ஐயாயிரம் செலவாயிடுச்சே...! வயிற்றில் எதோ கோளாறு இருக்கு என்றால் சந்தோசப் பட்டிருப்பேன் ஐயாயிரம் வீண் ஆச்சே ...அந்த பணம் செரிக்கலையே...வயிறுக்கும் அபடிதானோ...?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
