ஓரு தலை காதல்
என் காதல் மட்டும் ஏன் பெண்ணே...
இதுவரை,
பூக்காத பூவனமாகவும்
வெயிலே இல்லாத வேலூராகவும்
குளிரையே உணராத கொடைக்கானலாகவும் உள்ளது.
உன் பார்வைக்காகவும்/பதிலுக்காகவும் காத்திருப்பதால் நானும் ஓர் வகையில் அகிம்சை போராட்டம் நடத்திய காந்திதான்..
புரிந்துகொள் கண்ணே,
உன்னுடன் காமப் பந்தலில் படுத்துறங்க என்றுமே ஆசையில்லை...
மாறாக,
கண்கள் எனும் மொழி வழியே காதல் என்னும் கவிபாட மட்டுமே ஆசை.....
என் வாழ்வின் மீது இருந்த காரிருளை நீக்கிய என் சூரிய தேவதையே அந்த சூரியனைப் போல் நானும் என் காதலும் எப்போதும் உன் மீது நீங்காமல் இருக்கும்.......
என்றும் காதலுடன்...
பெ.பாரத்....!