காதல்‬ திகட்டல்

ஊடலின்
முடிவில்
நீ சொல்லும்
ச்சீ..போடா..
காதலின்
வெட்கம்!


அறிவிருக்கா டா
உனக்கு???
கோபமாகத்தான்
கேட்கிறாய் நீ...
காதலின் காதில்
விழவேயில்லை!


போடா.. லூசு...
நான் உன்ன
எப்படா
திட்டியிருக்கேன்!!
பொய்க் கோபம்கூட
பூச்செண்டாகிறது
உன் கைவிரல்களால்
வருடுகையில்!


அய்யோ...
அது எங்க அப்பாடா..
தலையில் அடித்து
சலித்துக் கொள்கிறாய்..
தேவதைகளுக்கும்
பயம் வரும்
காதலில்!


ப்ளீஸ் டா..
ப்ளீஸ்..
இந்த ஒரு வாட்டி மட்டும்
என கேட்கையில்
குழந்தையிடம்
கொஞ்சும்
அன்னையாகிறாய்
என்னுள்.

எழுதியவர் : பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (16-May-14, 8:02 pm)
பார்வை : 120

மேலே