கண்ணீர்
நதியின் கல்லறை
கடலானால்
கண்ணீர் நதி
எங்கே சங்கமிக்கிறது?
அது
இதயத்தில் முகடுகளிலிருந்து
நதியாக நடந்து வந்து
விழி வாசல்களில்
பூக்களாக உதிர்கிறது
வாழ்க்கை அப்பூக்களைச்
சூடிக் கொள்கிறது
*
இந்த நதி
இளஞ்சூடு என்றாலும்
விழிக்கரைக் கனவுகள்
வெந்துவிடுவதில்லை
*
கண்ணீர் ஏன்
உப்புக் கரிக்கிறது?
துயரங்களைத்
துடைத்துக்கொண்டு வருவதாலா?
*
காலங்காலமாய் கண்ணீர்
தனக்காகவே அழுதுக்கொண்டிருக்கிறது
அழகிய விழிப்பிரதேசத்தின்
மவுன வெளியிலிருந்து
துரத்தப்பட்ட அகதியாய்...! (1995)
(தரையில் இறங்கும் தேவதைகள் நூலில்..1997)