நாசமாப் போச்சு
துருப்பிடித்த மூளையுடன்
கிறுக்குத்தனமான
குறுக்குப் புத்தியுள்ள
குறுகிய சிந்தனை மனிதன்..!!
முட்டாள்தனங்களை
மூட்டை கட்டிக் கொண்டு
மூடப்பழக்க வழக்கங்களை
முதுகில் சுமக்கிறான்..!!
பகுத்தறிவை
பக்குவமாக தள்ளிவிட்டு,
பயமில்லா பயங்களை
பசை போட்டு ஒட்டி கொள்கிறான்..!!
சாமி கண்ணை குத்துமென
சத்தியம் செய்பவர்கள்,
சிந்திக்க கொஞ்சம்
கண்ணைத் திறக்கலாமே..!!
முரட்டு பக்தியும்,
முரட்டு குணமும்,
மூடர்களுக்கு மட்டுமே
முன்னோடியாக திகழும்..!!
காணிக்கை என்பது
மனிதனுக்கு தலை முடியாகவும்,
ஆடுகளுக்கு தலையாகவும்
இருப்பதன் பிண்ணனி
கடவுளின் சர்வாதிகாரமா...??
ஆத்திகம் பேசவும்
நாத்திகம் பேசவும்
நாதியில்லாத நேரம் இது,
நான் நாத்திகம் பேசுவதாக
நீங்கள் நினைத்தால்
கவிதை முழுவதும்
நாசமாப் போச்சு...!!