கருக்கலைப்பு செய்வது பெரும்பாவம்
தொலைபேசி உரையாடல் ஒன்று காதில்
காலையில் கேட்டேன்; மாத விலக்கு
தொன்னூறு நாட்கள் தள்ளிப் போயிற்று,
என்செய்வேன்! ஏற்கெனவே இரண்டு குழந்தைகள்,
கர்ப்பம் கலைக்க வேண்டும்; உபாயம்
கடிதில் எனக்குச் சொல்லென செவிலியை
ஒருபெண் கேட்டாள்; அதற்குநான் சொன்னேன்:
புருசனி டம்தான் படுத்தெ ழுந்தால்
பெற்றுக் கொள்ளச் சொல்லு, வாசக்டமி
புருசனையும் செய்து கொள்ளச் சொல்லு,
கள்ளக் காதலன் காரணம் என்றால்
கல்யாணம் கட்டிக்கச் சொல்லு! இதைவிட்டு
கருக்கலைப்பு செய்து உயிர்க்கொலை செய்வது
பெரும்பாவம் என்பதறி பெண்ணே என்றேன்!