நீ தானே என் சொந்தம்

மலர் சூடும் புது
மஞ்சம் நான் தேடும்
கவி சந்தம் நீதானடி...
என் பார்வை உன்னோடு
உன் பார்வை மண்ணோடு
நீகொஞ்சம் எனைப் பாரடி...
ஏகாந்தம்! புதுவெள்ளம்! இசை
தட்டும் மழை கிண்ணம்!
இவைதானே என் சொந்தமே...
விழியோரம் பனிக்காடு வழி
தோறும் மலர்க்காடு தினம்
சிந்தும் புதுசொந்தம் நீதானடி...
இமை தோறும் உன்
பிம்பம் இசை சேர்க்கும்
உன்நாமம் எனவாழும் வினையானேனே...
(மலர் சூடும் புது...)
மோனங்கள் ஸ்வரம் சேர்க்கும்
பானங்கள் எனை தாக்கும்
புரியாத புதிர் நீயடி...
விழி வெப்பம் விறகாக்கும்
உன்நிழல் கொஞ்சம் குளிர்காட்டும்
வெயிலோனின் வினைகொண்ட மதிமகளாநீ ???
காலங்கள்! காற்சட்டை! கடந்தாலும்
கலையாது கலை மகளே
நீ தந்த களிப்பனைத்துமே...
என் விழி கண்ட
வளம் எல்லாம் இளங்குமரி
நீ தந்த விசைதானடி...
சில கணங்கள் பல
தினங்கள் சிறைபட்ட
உன்நிறைகள் இவைதானே என்னுடைகள்...
(மலர் சூடும் புது...)
ராகங்கள் இசைத்தாலும்! தாளங்கள்
துடித்தாலும்! ஒலி எல்லாம்
செவிடாகும் என் வழியே...
உலகெல்லாம் உழன்றாலும் நிலம்
கொஞ்சம் நகன்றாலும் நிலைவிட்டு
நகராது என் பாதமே...
வழி பெற்ற வரம்
போதும் என் விழி
கொஞ்சம் இளைப்பாறும் இடமாறடி...
நான் செல்லும் திசையெல்லாம்
விழிமூடி வழி அடைக்க
நீஎந்தன் விரல் பிடியேண்டி...
கரையெல்லாம் கவி பாடும்
கலை நீயடி!! நுரையோடு
பின்தொடரும் எனை சேரடி...
(மலர் சூடும் புது...)
(இம்ம்ம்ம்கூம்ம்ம்ம்ம்ஹுஹூம் )