சொல்லாத காதல்- ஒரு பக்க காதல் ஏன் என்றால்

இந்திரலோகமும் காணாத

அழகும், அறிவும் கொண்ட

தேவதையே, தெரிந்து கொள் -

என் காதலை உன்னிடம்

ஏன் சொல்லவில்லை என்று?

சொல்லிய வார்த்தைகளுக்கு

மட்டும் இல்ல எழுதிய எழுத்துக்கும்

முற்றுப்புள்ளி உண்டு என்பது

எனக்கு தெரிந்ததால் தான் என்னவோ

முடிவில்லா என் காதலை

முடிவுடன் முடிக்க தெரியாமல்

தவித்துகொண்டிருக்கேனடி.

எழுதியவர் : Sundhar (20-May-14, 3:25 am)
சேர்த்தது : sundhar
பார்வை : 178

மேலே