ஒன்னுமில்ல

ஒன்னுமில்ல !!!


ஒன்னுமில்ல கண்ணா ஒன்னுமில்ல
என்னமோ தோனுது எண்ணத்துல
அன்னிக்கி கையில ஒன்னுமில்ல
வீடு வாசல்னு ஏதுமில்ல

வயலுக்கும் வரப்புக்கம் பஞ்சமில்ல
அரசாங்க வேலைக்கி லஞ்சமில்ல
கண்டத காட்டிட டீவி இல்ல
வெந்த சாப்பாட்டுல நஞ்சு இல்ல

நொடிக்கொன்னா பறக்குற வண்டி இல்ல
காத்துல தன்னீல தூசு இல்ல
பெட்டில பெங்குல காசு இல்ல
வித விதமா வர்ற வியாதி இல்ல

இன்னிக்கி இருக்குறது ஏதும் இல்ல
ஆனா அன்னிக்கி போல இப்ப ஒன்னுமில்ல.

__ அருள் ஸ்ரீ__

எழுதியவர் : ARULSHRI (20-May-14, 6:45 pm)
சேர்த்தது : ARULSHRI
பார்வை : 92

மேலே