செயல்படு

செயல்படு நண்பா செயல்படு!
இன்றே இப்பவே செயல்படு!
வந்தது வரட்டும் செயல்படு!
வெற்றி உனக்கே செயல்படு!
காலமும் நேரமும் கூடிவரும்!
கைகளில் உலகம் வந்துவிடும்!
வாய்ப்புகள் உனக்குக் காத்திருக்கும்!
ஏய்ப்புகள் உனக்குப் பயந்தோடும்!
விதைகளில் உள்ளது விருட்சமென
விரைவினில் நீயும் தெரிந்துவிடு...!
இளமைக்கு இல்லை எல்லையென
களத்தினில் நீயும் இறங்கிவிடு...!
தண்ணீர்த்துளிகள் சமுத்திரந்தான்!
கண்ணீர்த்துளியோ சரித்திரந்தான்!
ஜாதகம் எல்லாம் சாதகந்தான்!
நம்பிக்கை இருந்தால் சாத்தியந்தான்!
நாளைய பாரதம் அழைக்குது!
நமக்கும் கடமை இருக்குது!
பயிற்சியும் முயற்சியும் அரங்கேறி
புதிதாய்ப் பூமி மலரட்டும்!
- இராசகோபால் சுப்புலட்சுமி