விலைவாசி
விலைவாசியும் கோடை வெயில்லும் ஒன்றுதான்
இரண்டும் மனிதனை சுட்டெரிகிறது.
வெயில் சுடுவதை தாங்கிக்கொள்ள முடியும்
விலைவாசி சுடுவதை மனிதனால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை, ஏனென்றால் அது அவனை தாக்கி கொல்கிறது. இறுதியாக அது சுடுவதை அவனால் உணரமுடிவதில்லை சுடுகாட்டில்.
கல்லும் மண்ணும் கற்பனையும் நிறைந்தது
நம் கனவு இல்லம்.
ஆனால் பலருக்கு இல்லமே கனவாக போய்விடுகிறது.
கல்லும் மண்ணும் கற்பனைக்கு எட்டாத விலையில் உள்ளது.
காலத்தின் கட்டாயம்
கற்பனையையும், குடும்பத்தையும் சுமக்கும் அவர்கள் கல்லையும் மண்ணையும் போல வாழ தொடங்குகிறார்கள், விலைவாசி என்னும் வில்லனை வெல்ல முடியாமல்.