எங்கே என் அன்பே

உன்னை தழுவி
பிறந்த இந்த காதல்
எனக்கு ஒரு குழந்தைதானடி
அது
உதைத்தாலும், கடித்தாலும்
புன்னகையே வார்க்கும்
சிரிதல்லோ
ஆனந்த பூரிப்பில்
கண்ணீர் சிந்திப்போகும் என் இதயம்.
ஆருடமும் சொன்னதில்லையே
நீயே என்னவளென்று.
யார் நீ?
எங்கிருந்து வந்தாய் ?
என்றில்லை என் கேள்விகள்
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் ?
உன் வழித்தடங்களில்
காவலாளியான
என் விழிகள் கேட்கிறது.
இதுவரை கண்டதில்லை
உணர்ச்சி பேரலையின் தாண்டவத்தை
உன் விழிகள் பேசும் வரை .
நிலவின் தவமோ?
விளங்கவில்லை
நீ என்னை கிழித்தெறியும் வரை.
ஒரு நொடியிலே
உன் உலகில் -என்னை நிரப்பிவிடும்
வித்தகியே!
மறித்தாலும்
மறவாத நினைவினை
கொடுத்து
எங்கே சென்றாயோ?
அங்கும் இங்கும்
தேடித்தேடி
மீதமிருந்த
தனிமை சொன்னது
அவள் வருகையை விட
அவள் கொடுத்த
வலி பெரியது தான் என்று.