ஆஹா எத்தனை அழகு ---✿ சந்தோஷ் ✿

அவளின்
துப்பாக்கி விழி
முட்டி துளைக்குது- என்
பார்வை கோட்டைகளை..

ஆ ! அவளின்
கத்தி மூக்கில்
அறுப்பட ஏங்குகிறான் -என்
மூக்கு வேந்தன்.

அவளின் சிவப்பு
அல்வா இதழ்களை
ருசித்து சுவைப்பான்- என்
குறும்பு இதழரசன்.

கன்னம் ஆப்பிளை
கடிக்க துடிக்கிறார்கள் என்
பல்லவ மன்னர்கள்.

சங்கு கழுத்தை
சுவைக்க துடிக்கிறது என்
நாக்கு மிருகம்.

பிரம்மா...! ஒ பிரம்மா!
எப்படியடா படைத்தாய்..?
திரண்டு மிரட்டும்
அவள் இளமை
பருவப்பழங்களை...!


என்னது அங்கே
சதை பாதி இல்லையா....?
ஓ! அது இடையா ..?
ஆஹா! என்ன ஓர் அழகு ?
வானவில் இடுப்பழகு..!
வாழைத்தண்டு தொடையழகு..!
தாமரைக்கொண்டை பின்னழகு.!

அடேய் பிரம்மா..!
மிச்சம் சொச்சம்
ஏதும் குறையின்றி...!
அற்புதம் அதிசயம்
பேரழகு அவளை
உயிர்சிற்பமாய்
செய்துவிட்டாயடா பிரம்மா..!
இப்போதே....
பரிந்துரைக்கிறேன் .
உனக்கொரு ஆஸ்கார் விருது..!

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (22-May-14, 4:30 pm)
பார்வை : 745

மேலே