பிரிவின் வலி
வெகு நாட்களுக்கு பின் புரட்டுகிறேன்
என் வாழ்க்கை புத்தகத்தை...
பின்னோக்கி பயணிக்கும் ஒவ்வொரு
நொடியும் நரகமாய்...
வெகு நாட்களுக்கு பின் கன்னங்களை
தழுவும் கண்ணீர் துளி...
கண்கள் இரண்டும் கொட்டிதீர்க்கிறது
என்னுயிர் கொன்ட வலி...
இவை..
வடிந்துவிட்ட வெள்ளநீரும் அல்ல...
வற்றிவிட்ட குட்டைநீரும் அல்ல...
ஆழமான என் மனதுக்குள்
புதைந்திருக்கும் நிலத்தடி நீர்...
ஊற்றாக பொங்கி எழ
மூழ்கி கொன்டிருக்கிறேன் மெதுமெதுவாய்...
நடுங்கும் விரல்கள் கூறுகிறது நான்
கண்ட காயங்கள் ஆறிவிடவில்லை என்று..
குளறும் நா சுட்டிகாட்டுகிறது மனதை
தைத்த முட்கள் மறைந்திடவில்லை என்று...
தினறும் உதடுகள் பறைசாற்றுகிது மௌனமாய்
கதறியழுத ஈரம் காய்ந்திடவில்லை என்று...
பாரம் கூடி நெஞ்சை அடைக்க...
மூச்சும் அடங்கி மூர்ச்சை பிறக்க...
தினறுகிறேன்....
சாய்ந்துகொள்ள தோள் இன்றி..
வருடிகொடுக்கும் வார்த்தை இன்றி..
கண்ணில் பிறக்கும் நீர்த்திவலைகள்
ஒன்றே துணையான ஆறுதலாய்
கடந்து கொண்டிருக்கிறேன் இன்றைய இரவை...