அன்பை தேடி அனாதையானேன்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒரு மறைவிடம் தேடி
அலைகிறேன்
தனிமையில் வாழ நினைக்கிறேன்
உலகமே எனக்கு பிடிக்கல
வாழ என் மனம் சொல்லல
எங்கோ நான்
போகிறேன்
வழிகளை தினம் மறந்துவிட்டு
எதையோ நான்
தேடுகிறேன்
விழிகளை தினம் தொலைத்துவிட்டு
தண்ணீரை தேடி அலையும்
ஒரு மானை போல ஆனேன்
நான்
அன்பை தேடி அலைந்து
அனாதையாய் ஆனேன்......
-----------------------------------------------------------------------------------
வரிகள் அனைத்தும் என் அனுபவங்கள்
அன்புடன் :
ஏனோக்