காதலின் வேதனையின் உளறல்

தங்காத போது
தத்தளிக்கும் உன் மனது
என் தனிமையையை தனித்தது

நீ உறங்க ....
என் உறக்கம் தனித்தேன்
உன் நினைவு மட்டுமே
எனக்கு
நிழலாகி போனாதால்

உன் கனவிட்காய்
உன் இளமை தாகத்திட்காய்
என்னையே வருத்தினேன்
உன் உதட்டில்
புன்னகை பூக்க வேண்டும் என்பதற்காய்

ஆனால்
நீயோ கண்ணீரை மட்டும்
எனக்கு
கவிதையாய் வடித்தாய்
காலமெல்லாம்

காத்திருப்பேன் கடைசிவரை
காலவன் கைப்பிடிக்கும் வரை
கைதேர்ந்த உன் காதல் கனவுகளோடு

எழுதியவர் : (6-Mar-11, 9:28 am)
சேர்த்தது : angleanpu
பார்வை : 496

மேலே