ஏக்கத்துடன் ஒரு தாயின் காத்திருப்பு 555
ஆசை மகனே...
உன்னை என்
வயிற்றில் சுமக்க...
எத்தனை அமாவாசை
விரதம் இருந்திருப்பேன்...
எத்தனை பௌர்ணமி
கோவிலுக்கு சென்று இருப்பேன்...
உன்னை சுமக்க
தொடங்கிய நாள் முதல்...
உன் பௌர்ணமி
முகம் காண...
தினம் தினம் நாட்களை
எண்ணினேன்...
பத்து அமாவாசை
பத்து பௌர்ணமி
பார்த்து ரசித்தேன்...
என் வயிற்றில் நீ
கருவான நாள் முதல்...
நீ பார்த்தது
முன்னூறு அமாவாசையாட...
என் வயிற்றில்...
உன் பௌர்ணமி
முகத்தை கண்ட போது...
விண்ணில்
இல்லாத பௌர்ணமி...
என்னருகில்
ரசித்தேனடா...
நீ விரும்பியதை
படிக்கவைத்தேன்...
நீ விரும்பியவளே
என் மருமகளாக வந்தாள்...
நீ விரும்பியபடியே
மச்சி வீடு கட்டிகொடுதேன்...
நீ விரும்பியதால் முதியோர்
இல்லமும் வந்தேன்...
மாதத்தில்
ஒருமுறை வரும்...
அமாவாசை பௌர்ணமி
போல் கூட...
உன்னை காண
முடியவில்லையே...
மாதத்தில் ஒருமுறை
என்னை காண வருவாயா...
என் ஆசை மகனே...
காத்திருகிறேனடா
விழிகள் உறங்காமல்.....