தாய்
('மனித விந்தை, விந்தை மனிதனாக்கும்' சக்தி பெற்றவள் - தாய்.. பிறந்'தாய்', நடந்'தாய்', விழுந்'தாய்', வளர்ந்'தாய்', மகிழ்ந்'தாய்' - வாழ்வின் அணைத்து அசைவினிலும் அசையாத சக்தி, தாய்! உண்மை தான் - 'சுழல்கின்ற பூமியின் மேலே, சுழலாத பூமியும் நீ' - தாய் )
சுமை யென்று இறக்கி வைத்தாயில்லை,
எனை, தூக்கம் களைபோன் என வெறுத்தாயில்லை!
என்னை பொய்யாய் அன்றிச் சினந்தாயில்லை, என்
மழலை மடஉளறல் கேட்டுக் கேட்டுச் சளித்தாயில்லை!
மறுத்தாயில்லை - முலைப்பாலூட்ட எனக்கு மறு-தாய்-இல்லை,
அன்பின் எல்லை, விக்கலில் என்றுமே எனை மறந்தாயில்லை!
எனக்கு காயம் என்றால் உன்னிடம் மருந்தாயில்லை?
நின்மடி நிம்மதி தருமடி, நீ தெய்வத்தாய், வெறுந்தாயில்லை!
நமைப் பெற்றவள் மட்டுமே தாயா? இல்லை!
மண்ணில் மாதர் சீலர் தாயின் அங்கம் அன்றோ!