வேண்டாம் போ

விளையாடிட விரும்பியே அழைத்தேன்
விளையாட்டினில் விதிகளை அமைத்தாய்
வீணான நிலத்தில்
விளைவில்லாத மனதில்
விதைகள் எதற்க்கு?

பிடித்திட
மனம் மட்டும் இருக்கு
உன் கை பிடித்திட
வரம் மட்டும் எதற்க்கு?


தினம்தினம் உன் பேச்சினில் திகைத்தேன்
அனுதினம் அமைதியில் ரசித்தேன்
வாரம் தோறும்
வயதை குறைக்கும்
காதல் எதற்கு?

தோழியே தோள் கொடு போதும்
துறப்பது துறவனின் தேடல்
தேடி.. தேடி..
தூண்டிலுக்குள் துதியும் பாடி
மீனாய் வீழ்வது வேண்டாம்..,

வாயினில் சிரித்திட விரும்பினேன்
வாழ்க்கையில் அழுதிட விருப்பமேன்??

அணைத்திட கைகள் போதும்
அனைத்தையும் அனைத்திட
மனமொன்று போதும்
மதியின் மூலம்
மனதினை மாற்றி எழுது
மாற்றம் கொள்வோம்..,

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (23-May-14, 7:46 pm)
Tanglish : ventaam po
பார்வை : 109

மேலே