சினிமா சினிமா சினிமா

..."" சினிமா சினிமா சினிமா ""...

சிரிக்கவைத்ததும் இதுதான்
சிந்திக்கவைத்ததும் இதுதான்
சீரழிந்து நிற்பதும் இதுதான்
நல்லதும் இங்குண்டு
கெட்டதும் இங்குண்டு
கெட்டதை காட்டியே
நல்லதை மறைத்துவிட்டார்
ஒரு குவளை பாலிலே
ஒருதுளி விசமேயானாலும்
மொத்தபாலையும் நாமிங்கு
தூக்கித்தானே எறியவேண்டும்
அன்னப்பறவையாய் பிரித்தாலும்
அடிமேல் அடியடிக்க
அம்மியும் நகர்வதைப்போல்
தெடர்ந்தே நடப்பதினால்
தொல்லைதான் அதிகமுண்டு
தொழிலுக்காய் தொண்ணூறு
வேடமிட்டு வேடதாரிகள்
வேடிக்கை காட்டுகிறார்
வேடிக்கைக்கு இடையிடையே
விரசங்கள் மூட்டுகின்றார்
உடையணிந்தும் உடல்காட்டி
உள்ளதை காட்டி நடித்திடுவார்
அன்றொரு காலத்திலே
நடித்துணர்ந்து காட்டினார்கள்
இன்றைய காலத்திலோ
நடித்துணர்வை தூண்டுகிறார்
நன்மைகள் இருந்தாலும்
தீமைகள் கொழித்தாலும்
படைத்தவர் பண்பாய் சொல்லிடுவார்

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (23-May-14, 7:50 pm)
பார்வை : 542

மேலே