நினைக்கிறது வெறுக்கிறது

ஒட்டிப்பிறந்த
இரட்டைப் பிறவிகளை
வெட்டிப்
போடுவதில்
ஆனந்தம் கொள்கிறது
புகுந்த வீட்டு
குடித்தனம் ...........!

எத்தனை
முறை
சண்டையிட்டாலும்
இரத்த பந்தம்
வேறுபடுமா.........!

நேற்று வந்த
சொந்தம் பந்தத்தை பதம்
பார்க்க
நினைக்கிறது
வெறுக்கிறது..........!

பாசத்தை
வேசமிட்டு பாவியாக
நடித்து
சிரிக்கிறாள்
சினத்துடன்.........!

உனது தாய்
உனது தந்தை உனது
உறவு
நேற்று வந்த
சொந்தமல்ல............!

ஏமாந்து
விடாதே உன் அருகில்
உலகலகியும்
வந்தாலும் கூட.........!

எழுதியவர் : லெத்தீப் (23-May-14, 9:38 pm)
பார்வை : 90

மேலே