முகநூல் அரக்கன்

சிறுசுமுதல் பெரிசுவரை
முகநூலில் முகம்பார்த்து
முத்தெடுக்க நினைக்குது!

முன்னே ஒரு முகம்
பின்னே ஒரு முகம்
இதுவே இதன் விதி!

முகநூலில் முகம் காட்டுவோரைவிட
முகத்தை மூடிகொண்டோரே மிகஅதிகம்!
முகமெடுப்போர் ஆயிரத்தில்
அகமெடுப்போர் ஐந்திருந்தால் அதுவேஅதிகம்!

முகம் புதைத்து
மனம் புதைத்து
மெல்ல மெல்ல
கொல்ல கொல்ல
மிகுதியாகும் மோகவலை!

"விருப்பம்" பெறும் மோகத்தினால்
"பகிர்வு" பெறும் தாகத்தினால்
வெற்றுகளை விற்கவும்
விசமங்களை பரப்பவும்
முதலெடுத்து தலையெடுது
முகமில்லா முகங்காட்டும் பலர்!

மனதிலரையும் கோரவிபத்தும்
மதிமயக்கும் காட்சிகளும்
மனதை உருக்கும் வேசங்களும்
தினந்தினம் படம் போடும்!
வக்கிரங்களை பரப்பி
நிதம்நிதம் படம் ஓடும்!

எங்கிருந்தோ ஒருத்தன்
விரித்தவலை இந்த முகவலை!
வசமாய் வலைவிரித்து
விசமாய் சிக்கவைத்த மோகவலை!
மதியை மயக்கி பைசாபிடுங்க
மனதை கவ்விடும் பணவலை!

நம் எண்ணம் கவர்ந்து
நம் மனதை கெடுத்து
நம்மோடு கைகோர்க்குது!
நடுநிசி கடந்துது
நிதங்காலை உறக்குவித்து
நாடகம் நடத்துது!

நேரத்தை கொலைசெய்து
நிம்மதியை அடகுவைத்து
நம்பிழைப்பை கெடுத்து
நம்பணத்தை கொடுத்து
நிதம் அயலானுக்கு விலை!
நமக்கு இதுவோ வேலை?

பள்ளிப்பிள்ளைகளும் பார்க்குது
கல்லூரி இளசுகளும் இணையுது
இவர்களை கவர்வதெது?
எதைவிரும்பி பார்க்கிறார்கள்?
ஆவல்கொண்டு பக்கம்சென்றால்
அதிர்ச்சி..!!! ஆபத்து..!!!

அத்தனையும் ஆபாசம்!
அனைத்திலும் நாசம்!
ஆசை அழைப்புகள்!
அருவெறுப்பு வார்த்தைகள்!
அந்தரங்க உருப்புகள்!
அழிக்கும் தூண்டல்கள்!

படிக்கும் பசங்களிடம்
கையோடு புத்தகம்போல
கையோடு கைபேசியுண்டு!
கட்டுப்பாடில்லா சுதந்திரமுண்டு!
தனிமைபடும் வசதியுண்டு!
மோகம்வளர்க்க முகப்புத்தகமுண்டு!

இளம் பிள்ளைகளை கவிழ்த்து
இன்றைய தலைமுறையை பாழ்படுத்தி
இனமழிய விதைதூவும்
இனமொழிய வழிபோடும்
முகமழிக்கும் மோகம் தேவையா?
முகப்புத்தகம் தேவையா?

எழுதியவர் : சீர்காழி சபாபதி (23-May-14, 11:47 pm)
பார்வை : 407

மேலே