+மிட்டாய் விற்ற நாட்கள்+
மிட்டாய் விற்ற நாட்கள்
நினைத்தாலே இனிக்கிறதே...!
மனம் சிட்டாய் பறந்த நாட்கள்
கொட்டாயே வராத
அழகான பள்ளி நாட்கள்...
பள்ளி ஆரம்பித்து
முதல் பீரியட் முடியும் முன்பே
மிட்டாய் வாங்க
கடைக்கு சென்றுவிடுவோம்
தேன் மிட்டாய்
கடலை மிட்டாய்
ஆரஞ்சு மிட்டாய்
நெய் மிட்டாய்
சூட மிட்டாய்
அனைத்தும்
இரண்டிரண்டு பாக்கெட்டாய்
வாங்கி வருவோம்..
ரீசஸ் பெல் அடித்தவுடன்
நான்கைந்து பேர்
ஆளுக்கொரு பாக்கெட் எடுத்துக்கொண்டு
கத்தி கத்தி விற்க கிளம்பிவிடுவோம்...
ஐந்து பைசாவிற்கும்
பத்து பைசாவிற்குமாய்
கூவி கூவி
பள்ளி வளாகத்தில்
சந்தோசமாய் விற்போம்..
யார் முதலில் விற்பார்கள் என்பதில்
ஒரு போட்டியே நடைபெறும்..
பாக்கெட்டிற்கு
ஐம்பது பைசா முதல்
ஒரு ரூபாய் வரை
லாபம் வரும்..
அதனை
மறக்காமல் டீச்சரிடம் கொடுத்து
நல்ல பிள்ளை என்று பேர் வாங்குவோம்..
இப்போது நினைத்தாலும்
இன்பத்தை கொடுத்திடும்
இனிமையான நாட்களை
எப்போ காண்பேனோ..
நான்
்எப்படி காண்பேனோ..!!!