துளிப்பா
யாமிருக்க
பயமேன்
கல்வி
*******************
அன்று பெருவெள்ளம்
இன்று பெரும்பள்ளம்
நதிகளின் விதி
******************
கறுப்புத்தங்கம்
கவிதைச்சிங்கம்
வைரமுத்து
*****************
ஏழையாய் இருந்தால் புறக்கணிக்கும்
பணக்காரனாய் இருந்தால் அரவணைக்கும்
உறவுகள்
*****************
தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்கும்
ஊழல்