வாழிபனே விழித்துக் கொள்

வாலிப சிற்பியே எழு!! 
வருங்காலத்தை செம்மையாய் செதுக்க இருப்பவன் நீ!!!
எதற்கு கவலை??
மறந்து விடு... கவலையை துறந்து விடு...!!
உன்னை யாரும் சுனாமியில் படகோட்ட சொல்லவில்லை...
பூகம்பம் வரும் நேரம் செடி கொடிகளை நட்டு வைக்கக் கூறவில்லை
இது உன் வாழ்கை.!!.
இறைவன் நட்ட பயிர் ...உரம் இடுவது நீயாக இரு..!!
எதற்காகத் துயரப்படுகிறாய்??
உன் சட்டையில் ஓட்டையா? கேட்பவரிடம் நாகரீகம் எனக் கூறு!!.
காலில் செருப்பில்லையா? கேட்பவனிடம் வெறும்காலில் நடப்பது நன்று  என சொல்..!!
ஓசோனில் ஓட்டையா? உன்னைச் சுற்றி கூரை போடு...!!
கூரையிலும் ஓட்டையா?ஓட்டையை நோக்கி செடிகளை நடு...!!
ஒன்று புரிந்துக் கொள்...
உன் முதுகுக்குப் பின்னால் தட்டிக் கொடுப்பவரை விட எட்டி மிதிப்பவர் தான் அதிகம்..!!
கலங்காதே...
கடவுளின் துணை உனக்கு என்றும் இருக்கும்..
தோல்வியைக் கண்டு அஞ்சாதே..
தோல்விகள் தான் சிறு சிறு கற்கள்..
அந்த கற்கள் தான் ஒன்று கூடி வெற்றி என்னும் கட்டிடத்தைக் கட்டப் போகின்றன!!!
எதற்காகவும் அஞ்சாதே...
வீறு நடைப் போட்டுக்கொண்டு முன்னேறு!!!
நீ நடந்தால் கரடு முரடான பாலைவனப் பாதைகள் வயல்வெளிகளாக  மாறட்டும்..
என்றும் உன் முயற்சியை விட்டு விடாதே...
முடியாது என்பது புறமுதுகுக் காட்டி ஓடும் கோழைகளின் அறைக்கூவல்...
நீ "என்றும் முடியும்" என்பதைத் தாரக மந்திரமாய் ஜெபி...
பணிவாக வெற்றிப் பாதையில் நடந்துகொண்டிருக்கும் நீ தீங்கு வந்தால் எரிமலையாக வெடி...
தீமைக்கு எதிராகத் தீக்குச்சிக் கிழித்துப் போடு..
நினைப்பதுப் போல அழகானதில்லை உன் வாழ்க்கை..
நீ ஓடும் பாதையில் பல பாறைகளில் தடுக்கி விழ நேரிடும்..
அதற்காக ஒய்ந்து விடாதே..
அந்தப் பாறைகளை உன் முயற்சி என்னும் கோடாரியால் தகர்த்தெறி..
சாதிக்க வேண்டும் என்ற தீ தினந்தினம் உன்னுள் எரிந்து கொண்டிருக்கிறது..
அந்தத் தீயை அணைக்கப் பலர் தண்ணீர் வாலியுடன் காத்துக்கொண்டுள்ளனர்..
மசிந்து விடாதே ஏமாற்றங்களை எல்லாம் நெய்யாக பயன்படுத்தி அந்தத் தீயின் உக்கிரத்தைப் பெருக்கு..
நிலவில் சோறு உண்டு கடலில் கைக் கழுவி மேகத்தில் துடைக்க
வேண்டும் எனக் கனவுக் காணாதே..
நீ இருக்க ஒரு சிறந்த இடம்..
உன்னைச் சுற்றி நல்ல மனதுடன் சிலர்...
பச்சைப்பசேல் எனப் புல்வெளி..
கண்ணுக்குக் குளிர் ஊட்டும் வானம்..
மனதிற்குக் குளிர் தரும் நிலவு..
தன்னம்பிக்கையின் முத்திரையாய் மலை உச்சி..
இவற்றைக் கண்டு மகிழ்ந்துக் கொள்...
சோகத்தைத் தகர்த்தெறி...
உனக்கு எல்லைகளென எதுவும் இல்லை...
வானமே உன் எல்லை என நினைத்தால் ராக்கெட் கொண்டு அந்த எல்லையைத் தாண்டியும் பறந்து செல்..
நீ ரெக்கைக் கட்டிப் பறக்கும் பொழுது உன்னை நோக்கி அம்பு எய்த பலர் உள்ளனர்...
அவற்றைத் தாண்டி நீ சென்றால் வெற்றி நிச்சயம்...
வாலிபா!!
உன் முயற்சி என்னும் ஆயுதத்தை சரியாக பயன்படுத்து..
நீ நினைத்தால் பூமியைக் கட்டிலாகப் பயன்படுத்தி அதில் வானத்தை மெத்தையாகப் போட்டு மேகத்தைப் போர்வையாய் போர்த்திக் கொண்டு நிலவென்னும் தலயணையில் படுத்து உறங்கலாம்..
கரைக் காணாத நதிப் போல் ஓடு..
அளவிலா வானம் போல் ஆற்றலைப் பெருக்கு...
சூரிய ஒளிப் போல் தெளிவாய் திட்டமிட்டு முன்னேறு...
வெற்றி உமதே!!
-கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் பாலாஜி (26-May-14, 10:25 am)
பார்வை : 167

மேலே