முதல் திருமண நாள் வாழ்த்துக்கள்

சூரியனும்
மலரும் போல்

சுடரும்
நிறமும்போல்

கடலும்
அலையும்போல்

கனவும்
நினைவும் போல்

சந்தமும்
இசையும் போல்

சலங்கையும்
ஒலியும் போல்

தரணி உள்ளமட்டும்
தம்பதிகள் மகிழ்வுடன்

துளிர்விடும் பயிரைப்போல்
துடிப்புடன் வாழ..

வாழ்த்தும் அண்ணன் & அண்ணி

## குமரேசன் கிருஷ்ணன் ##

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (27-May-14, 8:26 am)
பார்வை : 6595

மேலே