இவன் யார்

இவன் யார்
===========

கேட்கப்படாத இரகசியங்களின்
புதையறை
தேள்கொட்டல்களைத் தாண்டி
அளவுகள் வரையறுக்கப்படாத
இருளிற்குள்
சுவாசமுட்டல்போல
அதுதான் புறமேற முயற்சிக்கிறது
ஏனிந்த சிடுமூஞ்சித்தனம்
ஆடிக்கொண்டிருக்கும் அசைகளுக்கு

முகப்பு விளக்கொளியின்
நிழல்தேடி
ஒளிந்துக்கொள்ளும் திருடனைப்போல
ஒட்டிக்கொண்ட கறடுகளை
காலங்களற்ற நீளத்திற்கு
குறிப்பேடுகளை இணைத்து ஒன்றாக்கி
எல்லாவற்றையுமே
உமிழ்ந்து தீர்க்கவேண்டும்

தலைபாரம் கூடுகின்றபொழுதெல்லாம்
வேறொரு உலகத்தை
பிரசவித்துவிடுகிறது ஏக்கம்
சுயாட்சியின்போது
தோன்றிடும்
குழந்தைத்தனங்களையும் க்ரூரங்களையும்
தோண்டிப்புதைக்க
அதோ ஏராளமான வெற்றிடங்கள்
வரவேற்றப்படி கிடக்கிறது அங்கே
மனப் பிரளயத்தோடு
போர்புரிந்து தோற்கவோ வெல்லவோ
அப்படியொரு அவன் என்னும் அவனின்சுயம் ,,

விழித் தெழுகையில்
ஒன்றுமே நிகழாததைப்போல்
புறம் பொழிந்து
கண்ணாடிச்சட்டங்களிலப்பி
நிலத்தில் வழிந்தோடுகிற
மழைநீரின் திண்மையையும்
வகிர்ந்தவோலையின்வழியே
இன்றைய பிரபஞ்சத்தில்
நேர்ந்து முடிந்தவைகளையும்
கண்டு இரசித்தபடி
தொகுப்பாக்கிக்கொண்டிருக்கும்
இசைவாணைக்கிடையில் இவன் யார்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (27-May-14, 4:48 pm)
பார்வை : 92

மேலே