முட்டாள் கிளியே

வேளைக்கு வேளை
உண்ண உணவு

நீ பொறுக்கி போட்டால்தான்
பலருக்கு உணவு..........

நீ சொன்னால்
அது வேதவாக்கு..........

குறைந்தது
நூறு பேர் தினம்
உன்னை தேடி...........

நீ அதிர்ஷ்டசாலி
உன்னை போல் வாழ்வு
கிடைக்காதா என என் இனத்தில்
தவம் புரிகிறார் பலர்...........

நீ என்ன வென்றால்
நாளுக்கொரு முறை அழுகிறாயே
சுதந்திரம் வேண்டும் என்று.........

நீ மனிதனாய் பிறந்திருந்தால்
உணவு மட்டும் போது
என சொன்ன இடம் அமர்ந்திருப்பாய்
இப்படி சுதந்திரமா கேட்பாய்
முட்டாள் கிளியே.............

எழுதியவர் : கவியரசன் (31-May-14, 1:30 am)
Tanglish : muttal kiliye
பார்வை : 123

மேலே