கண்கள் நீ கலங்காதே என்னை நீ மறவாதே

தூக்கம் வராத அவஸ்தையில்
உன் இமைகள் துடிப்பதை படும் வேதனையில்
எமை வாட்டும் துயரங்களை
உன் கண்களின் ஆழத்தில்
நெஞ்சூடுறுவி உயிர் துடிக்குமொரு
ரகசியத்தை திடுமென வெளிபடுத்த
தீவிரமாய் யோசிக்கும் என் மனக்கூடு
என்னுள் நான் பத்திரபடுத்தி இருந்தேனடி என் தங்கமே....
மண்குடுவை அதனை இந்த பூமிதனில் போட்டுவிட்டால் மண்குடுவை சிதறிவிடும்....
ஆனால் உன் மன கூட்டில் நான் இருக்கின்றேன்...
என்னை நீ தூக்கி எரிந்து விடாதே என் ஞானதங்கமே....
எனை விட்டு விலகாதே கண்கள் நீ கலங்காதே...
காலமெல்லாம் நான் காப்பேன் நீ வருந்தாதே...
உன் உயிர் துடிப்பு இருக்கும் வரை நீ தானே எனக்கு...
உன் கண்கள் குளமாகி உடல் வருத்தி என்ன
நீ சாதிப்பாய்....
உன் பெற்றோரை விலகி நீ என்னை நாடி
நீ வந்தாய்....
பூப்போல உன்னை காப்பேன் நீ வருந்தாதே...
கண்கள் நீ கலங்காதே... என்னை நீ மறவாதே...
காலம் நம்மை சேர்த்து வைக்கும்
நீ எதை நினைத்தும் வருந்தாதே...

எழுதியவர் : ரஜினிகாந்த் ஏ (31-May-14, 7:47 am)
சேர்த்தது : RAJINIKANTH E
பார்வை : 123

மேலே