மிச்சம் கண்டது நஞ்சை மட்டும்

வீடுகளின் வசதியில்
சதிகளை மனதினில்
நீ விதைத்தாய்..,


மாடிவீட்டினில்
மல்லிகை வாசம்
மனது கூட்டினில்
ஆனது மோசம்..,

விடியும் நேரமும்
விழியினில் கலக்கம்..,
வீதி வெளிச்சத்தில்
நடக்கவும் தயக்கம்..,

வீழ்ந்துகிடக்குறேன்
வழிகளும் மாற..,
வியந்து பார்ப்பேன்
விழிகளும் சேர..,

சாதி சாதி
சாஸ்திரம் கலைய..,
சாவி வேண்டும்
மோதிரம் மற்ற..,

சாட்சி சொல்லவும்
எவனுமே இல்லை..,
மூச்சி விடவும்
மனதினில் தொல்லை..,

காட்டுத்தனமாய்
காதலில் விழுந்தேன்..,
காதல் கரைந்தால்
காட்டினில் புதைவேன்..,


கொஞ்சிய காதல்
மிஞ்சியதாலே
நான் மிச்சம் கண்டது
நஞ்சை மட்டும்...

எழுதியவர் : சந்தோஷ் ஹிமாத்ரி (1-Jun-14, 10:35 am)
பார்வை : 108

மேலே