என்றும் உன்னோடு
வண்ண மலர்களின் வாசத்தில் !
அழகிய ஆற்றங்கரை ஒரத்தில் !
நான் வாழ்ந்த அவள் நினைவோடு!
நண்பர்களின் துயர பிரிவோடு !
ஆற்றுபடுகையில் அமைந்த கல்லறைக்கு மகிழ்வோடு செல்கின்றேன்!
என்னவளின் கருவரையிலாவது இடம் கிடைக்கும் என்ற கனவோடு...!
இடம் கிடைத்தால் மீண்டும் தொடருவேன் தாய் சேய் என்ற உறவோடு...!!