என் கவிதையும் என் கற்பனையும் என் கனவும் ..!

கவிதை எழுத
நினைத்து
கற்பனையை
எழுப்பினால்
அது
கனவிடம்
தஞ்சம்
அடைகிறது
சரி என்று
கனவிடம் தூது
சென்றால்
அது
உன்
நினைவிடமே
செல்கிறதடி..!
என் கவிதையும்
என் கற்பனையும்
என் கனவும்
எல்லாமே
நீ தானடி...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (7-Jun-10, 9:18 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 846

மேலே