அன்பெனும் பண்பு

அன்பெனும் பண்பே!
ஆனந்த ஊற்று அக மனக் காற்று!
தென்றலாய் வீசும் உள் மனத் தாலாட்டு!

அன்பெனும் பண்பே!
ஆற்றும் அயல் மன காயம்!
அக மகிழ் நேயம்!

அன்பெனும் பண்பே!
அகம் கொள்ளும் சாரம்!
மற்றெல்லாம் அகங்கார பேதம்!

அன்பெனும் பண்பே!
பிறவியின் பெருமை!
வாழ்வதின் அருமை!

அன்பெனும் பண்பே!
செருக்கிலா அடக்கம்!
சீர்மிகு பழக்கம்!

அன்பெனும் பண்பே!
அற்பனையும் ஆண்டவனாக்கும் ஆதி தத்துவம்!
மனித மகத்துவம்!

எழுதியவர் : கானல் நீர் (5-Jun-14, 9:11 pm)
சேர்த்தது : கானல் நீா்
பார்வை : 119

மேலே