நீர்க்குமிழி
ரெண்டு ஜோடி பறவையில்
ஊதா பறவை செம சுட்டி...
முண்டிஅடித்து சண்டை போட்டு
சாப்பிடும் அழகும் திமிரும்...
எத்தனை தைரியம் என்று
மிரண்டு விலகும் பெரிய பறவையும்...
கூண்டுக் கதவு திறந்த உடனே
பறந்தது வேகமாய் திடீரென்று...
ஓடின காத்தாடியில் பட்டு
உயிர் விட்டது பாவமாய்...
எங்கு போனது அதன் துடிப்பெல்லாம்
வியந்தது உயிருள்ள நான்...