உலகத்தை காண உதயத்தில் புறப்பட்டேன்
உதயத்தில் ஒரு நாள்
உலகினை காண நான் புறப்பட்டேன்
உண்மையில் அது தான்
நான் செய்த தவறென்று அறிவில் கொண்டேன்
ஊரினில் யாருக்கும் உள்ளம் இல்லை
பாரினில் மனிதர்க்கு உறவு ஒரு பொருட்டும் இல்லை
உல்லாச வாழ்வே அனைவரின் கனவு
இல்லாத போகங்கள் பெற்றிட அவர் படும் பாடு
உணவினை பதுக்கி, வறுமையை அதிகரிக்கும் வியாபாரிகள்
உயிரினை வதைத்து, பணத்தினை பறிக்கும் கொள்ளை கார்கள்
உற்றவர் எல்லாம் பணம் பெற்றவராய் இருந்தால் தான் உறவே
மற்றவர் எல்லாம் மனம் கொண்டவராய் இருந்தாலும் இல்லை பயனே
உதயங்கள் வருவது ஊருக்கெல்லாம் வெளிச்சம் தந்திடவே
இதயங்கள் இருளில் இருக்க அடம் பிடித்தால், கதிரவன் செய்வதென்னவோ?
உள்ளத்தில் கள்ளம், உதட்டினில் தேன் ரசம், வார்த்தையில் நயவஞ்சகம்
எண்ணத்தில் எப்போதும் நேர்மை இல்லை, எங்கே செல்கின்றது இந்த உலகம்
உலகத்தை காண நான் புறப்பட்டது, இதயத்தில் பாரம் சுமந்திடவோ?