குபேரன் பொம்மை ஹைக்கூ

*
உடலைச் சிலிர்த்துத்
துவட்டிக் கொள்கின்றன
மழையில் நனைந்தப் பறவைகள்.
*
குழந்தைக்குப் பால்
கொண்டு வரச் சொல்லி
கொக்கை அழைக்கிறாள் தாய்.
*
முகத்தைச் சுளித்து
வாயிலிருந்ததைத் துப்பினான்
புளிப்புத் திராட்சை.
*
பணம் சேரும் என்ற நப்பாசை
குபேரன் பொம்மை வாங்கி வைத்தான்
உடைத்துவிட்டுச் சிரித்தது குழந்தை.
* .

எழுதியவர் : (8-Jun-14, 8:44 am)
பார்வை : 116

மேலே